தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியின் படத்திறப்பு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் மேடையில் பேசிய அவர், பெரியாரை இன்று பேசுபவர்களை நாம் அனுமதித்தால் அம்பேத்கரை நாளை மராட்டியர் என்று சொல்லி அந்நியப்படுத்துவார்கள்.
அவருக்கும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்பார்கள்.நம் தமிழகத்தில் தமிழை தாய் மொழியாக கொண்ட தலைவர்கள் இல்லையா? இரட்டைமலை சீனிவாசன் மற்றும் பண்டிதர் அயோத்திதாசர் இல்லையா என ஒரு பட்டியலை அவர்கள் நீட்டுவார்கள்.
இது ஒரு அரைவேக்காட்டுத்தனமான அரசியல். மொழிவாத அடிப்படையில் இனவாத அரசியலை உயர்த்தி பிடிக்கும் ஒரு முயற்சி. திமுகவை அளிக்க பல சதிகள் நடந்து கொண்டிருக்கிறது. எக்கச்சக்கமான எதிரிகளை சந்தித்தவர்கள் நாங்கள் இருக்கும் வரை திமுக கூட்டணியை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது” என திருமாவளவன் பேசியுள்ளார்