எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை!
Dinamaalai February 05, 2025 12:48 AM


தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர்  அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி  வருகின்றனர்.அண்ணாவின் 56 வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தையொட்டி அண்ணா நினைவிடத்தில்   அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.