#featured_image %name%
நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டாம் என்றும், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுச் செல்லக் கூடாது என்றும், ஆங்கிலேயர் சென்றுவிட்டால் இந்தியர்களால் ஒரு குண்டூசிகூடத் தயாரிக்க முடியாது என்றும் கருத்துகளைத் தெரிவித்து, இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு எதிராக இருந்த ஈ.வே.ரா மற்றும் திராவிட இயக்கத்தவர்களின் பெயர்களை தமிழகத்தில் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும், பொது இடங்களுக்கும் தெருக்களுக்கும் திராவிட மாடல் அரசு சூட்டி வரும் நிலையில், திமுக.,வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த தெருக்களுக்கு அவர்கள் பெயர்களைச் சூட்ட வேண்டும் என, அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசு நல பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிசுதந்திர போராட்ட வீரர்களின்
வாரிசு நல பிரிவு சார்பாக மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமும் தியாகிகள் தினமும் சென்னை எழும்பூரில் உள்ள ஜீவன் ஜோதி அரங்கில் இயக்கத்தின் பொருளாளர் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைப்பெற்றது.
நிர்வாகிகள் பா.ஞானவேல் கதர் வி. வெங்கடேசன் ஆருண்ரசித் கோவை எஸ்.முத்துவேல், கே. என் சீனிவாசன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ். டேவிட் கே.ஜெயக்குமார். லட்சுமிராஜராம் ராயப்பேட்டை எஸ்.கே. அன்பழகன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்கள்.
கெளரவ ஆலோசகர் பொன் கிருஷ்ணன மூர்த்தி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு காந்தியடிகள் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தினர்.
நிகழ்ச்சியில்,தியாகிகள்இருசாகவுடர், பெருமாள், சித்தா சாமி மற்றும் பண்ருட்டி ஆர்.நிஜார் அகமது, சி.சின்னையா டி. புஷ்பராஜ், இ.ரிச்சர்ட் , மேலூர் ஜெயபால்உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்கள் அலங்கரிப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. மறைந்த தியாகிகள் வாழ்ந்த தெருவுக்களுக்கு அவர்கள் பெயர்களைச் சூட்டி அவர்களின் தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
News First Appeared in