சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் பிரபல கிரிக்கெட் வீரர்..!
Newstm Tamil February 05, 2025 12:48 AM

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி திமுத் கருணரத்னவின் கடைசி போட்டியாகும்.

இலங்கை அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் 99 டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 40க்கும் குறைவான சராசரியில் 7,172 ரன்கள் எடுத்துள்ளார்.

50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் திமுத் கருணரத்ன ஒரு சதம் மற்றும் 11 அரைசதங்களுடன் 1,316 ரன்கள் எடுத்துள்ளார்.

“ஒரு டெஸ்ட் வீரர் ஒரு வருடத்திற்கு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவும், தனது ஃபார்மைத் தக்கவைக்கவும் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது கடினம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகம் செய்யப்பட்ட கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில், நாங்கள் மிகக் குறைந்த இருதரப்பு தொடர்களில் தான் விளையாடினோம்.”

“எனது தற்போதைய ஃபார்ம்-ஐ கருத்தில் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி (2023-25) முடிவு அன்று எனது 100 டெஸ்ட் போட்டியை விளையாடி, ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன்,” என்று கருணரத்ன தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.