ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தொட்டி குண்டா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1995 ஆம் ஆண்டு முதலில் இரட்டை குழந்தைகள் பிறந்து வருகிறது. அந்த பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக வீடு வீடாக சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய போது தான் அங்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது தெரியவந்தது.
இந்த கணக்கெடுப்பை ஆசிரியர் சீனிவாசன் என்பவர் எடுத்த நிலையில் அவருடைய மனைவிக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். மேலும் இது மாநிலம் முழுவதும் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.