பிரயாக்ராஜ் ஜில் இன்றுடன் கும்பமேளா நிறைவடைகிறது. இது வரையிலும் 63 கோடி பேர் கும்பமேளாவில் பங்கேற்று நீராடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவனுடன் கும்பமேளாவுக்கு செல்ல முடியாத மனைவி ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவனுடன் வீடியோ கால் செய்து பேசிக் கொண்டிருந்த மனைவி அந்த செல்போனை அப்படியே தண்ணீருக்குள மூன்று தடவை முக்கி முக்கி எடுத்து கணவனை கும்பமேளா நீராடச் செய்து விட்டார்.
செல்போன் நீராடல் முடிந்ததும் அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த பரவசம் தான் முக்கியமானது. வர முடியாத கணவனை வர வைத்து கும்பமேளா நீராட வைத்து விட்டேன் பார்த்தீங்களா என்று கேட்பது போலவே இருந்தது அவருடைய புன்னகை. ஆனாலும் இது பயங்கரமான புத்திசாலித்தனம் இல்லே.
பாக்குறவங்களுக்கு அந்த செல்போன் பாழாகிப்போகுதே என்ற கவலை ஏற்படாமல் இல்லை!