அரசுப்பள்ளி கழிவறையில் மாணவன் மர்ம மரணம்... அலறித் துடித்த பெற்றோர்!
Dinamaalai February 26, 2025 08:48 PM

 தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசுப் பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  படித்து வந்த மாணவன் ஒருவன் கழிவறையில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளான். இது குறித்து  தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து, மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அலறி அடித்துக்கொண்டு மகனை பார்ப்பதற்காக சென்றனர். இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் உயிரிழப்புக்கு காரணம் கேட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த தகவல்கள்  எதுவும் உடனடியாக  தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து  வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.