கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்கள் 10 பேருக்கு தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கிழியாக தலா ரூ.1லட்சம் பரிசு தொகை வழங்கினார்.
கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசும்,தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்ற 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா ரூ.1.50லட்சம் நிதியுதவியும், மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா ரூ.25.000 உதவி தொகையும் வழங்கப்பட்டது.