“வெறும் 25 வினாடி தான்”… எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் DeepsSeek செயலி… ஆட்டம் காணும் ஜோதிடத்துறை… செம ஆப்பு..!
SeithiSolai Tamil March 09, 2025 06:48 PM

சீனாவில் சேர்ந்த டீப் சேக் செயலி ஏஐ தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இது அமெரிக்க பங்குச்சந்தையை ஆட்டம் காண வைக்கும் அளவிற்கு வலிமை வாய்ந்தது. இந்த டீ பேக் செயலிக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் தடை விதித்து வருகிறார்கள். இது தீங்கு விளைவிக்க கூடிய செயலி என்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம் டெல்லி உயர் நீதிமன்றம் கூட கூறியது. இந்நிலையில் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் பல தொழில்களில் மனிதர்கள் வேலையை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ஜோதிடத் துறைக்கும் இது ஆப்பு வைத்துள்ளது. அதாவது இந்த செயலியில் தற்போது ஜோதிட கணிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிறந்த தேதி மற்றும் பெயர் போன்ற விவரங்களை சரியாக பதிவிட்டால் 25 வினாடிகளில் எதிர்காலத்தை கணித்து சொல்லுமாம். மேலும் இதனை பயன்படுத்தி சீனாவை சேர்ந்த பலர் தங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொண்டு வருகிறார்கள். மேலும் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.