மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசல் உள்ளதா? என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர், அந்த மாதிரி எதுவும் கிடையாது. கூட்டணி குறித்து இப்போ சொல்ல முடியாது.
நம்ம ஜோசியம் சொல்ல முடியாது. இன்னும் ஒரு வருடம் உள்ளது. அதனால் அதுவரை பொறுத்திருங்கள். அந்த காலம் வரும் பொழுது நிச்சயமாக அதுக்கான அறிவிப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.