அதிமுக சார்பில் 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
அதனால் கூட்டணி குறித்து யார் கேட்டாலும் தலைமை முடிவு எடுக்கும் என்று கூறுங்கள். உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்கள் .வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழையுங்கள் என்று அவர் தெரிவித்தார்.