“HIT MAN”… கேப்டன்னா சும்மாவா…? நிரூபிச்சிட்டாருயா… ஆட்டநாயகன் விருதை தட்டி தூக்கிய ரோகித் சர்மா…!!!
SeithiSolai Tamil March 10, 2025 03:48 AM

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்கள் வரை எடுத்தார்.

அதற்கு அடுத்தடுத்து வந்த இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இறுதியில் இந்திய அணி 49 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து 4விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் மைதானத்தில் மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர்.குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தாண்டியா நடனம் ஆடினர். மேலும் போட்டி முடிவடைந்த நிலையில் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.