ஏற்காட்டில் ஆசிரியை கொலை…. விஷ ஊசி போட மாட்டேனு சொன்னேன்… ஆனால்…. கைதான நர்சிங் பெண் குடுத்த பகீர் வாக்குமூலம்…!!!
SeithiSolai Tamil March 10, 2025 03:48 AM

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது அந்த பெண்ணின் கொலையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் லோகநாயகி. இவர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்து அருகிலுள்ள ஒரு நீட் பயிற்சி மையத்தில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் திடீரென மாயமான நிலையில் கடந்த நான்கு நாட்களாக விடுதிக்கு வரவில்லை. இதனால் அந்த விடுதியின் வார்டன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து லோகநாயகியை தேடி வந்தனர்.

அவருடைய செல்போன் கடைசியாக ஏற்காடு மலைப் பகுதியில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்த நிலையில் அவர் யாருடன் பேசினார் என்பதை போலீசார் பார்த்தனர். அப்போது அப்துல் ஹபீஸ் என்ற 22 வயது வாலிபருடன் அவர் பேசியது தெரிய வந்தது. இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஆவார். இவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல உண்மை தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது இவரும் லோகநாயகியும் காதலித்து வந்துள்ளனர். இதில் அப்துலை விட லோகநாயகி வயது மூத்தவர். இதற்கிடையில் அப்துலுக்கு வேறொரு பெண்ணின் மீதும் காதல் வந்துள்ளது.

இதனால் அப்துல் லோகநாயகியை கழற்றி விட முடிவு செய்த நிலையில் அவரோ திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அப்துல் விஷ ஊசி போட்டு அவரை கொலை செய்து விட்டார். இதற்கு அவருடைய காதலி காவியா சுல்தானா (22) மற்றும் அவருடைய தோழி ஒருவர் உதவி செய்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து லோகநாயகியை கடந்த 1-ம் தேதி ஏற்காடு மலை பகுதிக்கு காரில் அழைத்துச் சென்றனர். பின்னர் ஜூஸில் மயக்கமருந்து கலந்து அவருக்கு கொடுத்த நிலையில் விஷ ஊசி போட்டு கொலை செய்து விட்டு மலையில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் காவியா ஐடி ஊழியர் ஆவார். மேலும் காவல்துறையினர் தற்போது அப்துல், அவருடைய காதலி காவியா மற்றும் அவருடைய தோழி மோனிஷா ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் மோனிஷாவிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது, அப்துல் தனக்கு தங்கை உறவு கொண்ட தாஹியா சுல்தானாவின், அண்ணனை திருமணம் செய்து கொலை செய்த லோகநாயகியை பழிவாங்க வேண்டும். அதனால் அவருக்கு ஊசி போட்டுக் கொலை செய்ய வேண்டும். அதை நீ தான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் சேலத்திற்கு வந்த மோனிஷா தான் வைத்துள்ள அறுவை சிகிச்சைக்கான மயக்கம் மருந்தை கொடுத்துவிட்டு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த ஊசியை நீ தான் போட வேண்டும் என்று அப்துல் மிரட்டி உள்ளார். இதனால் ஏற்காடு மலைப்பகுதியில் காருக்குள் வைத்து பெயின் கில்லர் என்று கூறி அதிக டோஸேஜ் கொண்ட மயக்க ஊசியை முதலில் போட்டுள்ளார். அதன் பின்பு விஷ ஊசியை போட்டுள்ளார். இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அதன் பின் அவரை மலையில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டதாக மோனிஷா காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.