தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்வதற்காக சென்ற நிலையில் தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார். இன்று காலை சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இசைஞானியை வரவேற்க அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்றுள்ளார். இந்நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதன்படி ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் அவர் சிம்பொனியை அரங்கேற்றம் செய்வதாக கூறிய அவர் சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள் என்றும் கோரிக்கை விடுத்தார். அதாவது சிம்பொனி இசையை நேரில் உணர வேண்டும். எனவே டவுன்லோட் செய்ய வேண்டாம். மேலும் அது விரைவில் நம்முடைய மண்ணிலும் நடக்கும் என்று கூறினார். இதன் மூலம் இந்தியாவிலும் அவர் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.