இன்றைய நிலவரம்..! பத்து பத்து ரூபாயா சைலண்டா தங்கம் விலை ஏறுது.!
Newstm Tamil March 10, 2025 05:48 PM

சமீபகாலமாக தங்கம் வாங்குவோருக்கு ஒருவித குழப்பத்தை அளித்து வரும் தங்கத்தால், அதை வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விலை மாறாமல் அப்படியே இருந்த தங்கம் விலை இன்று விலை ஏற்றம் கண்டுள்ளது. இது நகை வாங்குவோர்களிடையே பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,320-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,050-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கும் விற்பனையாகிறது.

கடந்த நான்கு நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320

07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240

06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.