சிங்கப்பெண்ணே: மகேஷ் உயிர் பிழைத்தானா? அன்புவின் மேல் விழுந்த அபாண்டமான பழி!
CineReporters Tamil March 13, 2025 02:48 AM

சிங்கப்பெண்ணே தொடரில் இன்றைய எபிசோடின் கதைச் சுருக்கம் இதுதான். அன்பு, ஆனந்தி, மகேஷ் மூவரையும் தீர்த்துக் கட்ட வேண்டும். அப்போதுதான் கம்பெனியையும் கைப்பற்ற முடியும். மித்ராவும் தனக்குக் கிடைப்பாள் என்று மகேஷின் நண்பனும், மார்க்கெட்டிங் சிஇஓவுமான அரவிந்தன் திட்டம் போடுகிறான்.

அதற்காக கூலிப்படையை ஏவி விடுகிறான். அவனது ஒவ்வொரு சதியையும் அன்பு எதேச்சையாக முறியடிக்கிறான். ஒரு கட்டத்தில் அன்புவை தனியாக பீச்சுக்கு மகேஷ் வரச்சொன்னதாக சொல்லி அழைக்கிறான். அதே நேரம் அன்புவும் மகேஷ் மீதுள்ள பாசத்தால் பீச்சுக்குச் செல்கிறான்.

அங்கு அன்புவைப் பார்த்ததும் உன்னை யாரு வரச்சொன்னதுன்னு கோபப்படுகிறான் மகேஷ். அப்போது மறைந்திருந்த அரவிந்தனும், அவனது கூட்டாளியும் முகமூடி போட்டு கத்தியுடன் மகேஷைக் கொல்லத் தயாராக இருக்கின்றனர்.

மகேஷோ நான் ஆனந்தியிடம் தான் பேசணும்னு இருக்கேன். உன்னை யாரு வரச்சொன்னதுன்னு அன்புவிடம் எரிந்து விழுகிறான். அப்போது அன்புவை எட்டி உதைக்கிறான். அதனால் அன்புவும் எப்படியாவது மகேஷை சமாதானப்படுத்துவது என அவரது கையைப் பிடித்துக் கெஞ்சுகிறான்.

ஆனால் அதை மகேஷ் தவறாக நினைத்துக் கொண்டு மேலும் அன்புவை அடிக்கிறான். அதை அன்பு தடுக்கிறான். அப்போது இதுதான் நல்ல நேரம்னு முகமூடி அணிந்தவர்களில் ஒருவன் மகேஷின் விலாவில் கத்தியால் குத்தி விட்டு ஓடிவிடுகிறான்.

அப்போது மயக்கத்தில் இருந்த அன்புவும் எழுந்து பார்த்து மகேஷின் ரத்தத்தை நிறுத்த தன் சட்டையைக் கழற்றி கட்டி விட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை அளிக்கிறான். அங்கு மகேஷூக்காக ரத்தம் கொடுக்கிறான். மருத்துவமனை நிர்வாகம் போலீஸ்சுக்கும், மகேஷின் பெற்றோருக்கும் தகவலைத் தெரியப்படுத்தச் சொல்கிறது.

அங்கு அனைவரும் வருகின்றனர். மருத்துவர் 'நீங்க நல்ல நேரத்துல ரத்தம் கொடுத்ததால உயிருக்கு ஆபத்து இல்ல. கண் முழிச்சதும் பார்க்க விடுறேன்'னு அன்புவிடம் சொல்கிறார். அந்த நேரத்தில் அரவிந்த், மித்ரா, அன்புவின் பெற்றோர் வந்துவிட, அவர்கள் அனைவரும் அன்புவையும், ஆனந்தியையும் தான் தவறாக பார்க்கின்றனர்.


அவர்கள் தான் மகேஷைக் கொல்லத் திட்டம் போட்டதாகப் பேசுகின்றனர். இதற்கிடையில் அரவிந்தனும் நான் அன்புவை மகேஷைப் போய் பார்னு சொல்லவே இல்லை என பொய் சொல்லி விடுகிறான். இனி என்ன நடக்கப் போகிறது என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.