சர்க்கரை நோயாளிகள் பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா ?
Top Tamil News March 16, 2025 09:48 AM

பொதுவாக சர்க்கரை நோயாளிகள்  தொடக்கூடாத உணவு வகைகள் இருக்கின்றன .அந்த பட்டியலை படித்து பார்த்து விட்டு அந்த உணவு வகைகளை தவிர்த்தல் நலம் சேர்க்கும் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், போன்றவைகளை ஒதுக்க வேண்டும் .
2.மேலும் சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்
3. செயற்கை குளிர் பானம் தீமையானது. இது போன்ற பாட்டில் பானங்கள் (Health Drinks) தவிர்க்க வேண்டும்.
4.எண்ணெய் பொருட்களில் செய்யக்கூடிய பஜ்ஜி வடை போன்றவை தவிர்த்தால் சுகர் அளவு குறையும்  
5.உலர்ந்த பழங்களை எடுக்க வேண்டாம். மாம்பழம் ,சீதாப்பழம், பலாப்பழம், அன்னாசி, திராட்சை போன்ற பழங்களை எடுக்காமல் இருந்தால் சுகர் அளவு உயராது .


6.ஆப்பிள் (Apple), ஆரஞ்சு (Orange), மாதுளை (Pomegranate), நெல்லிக்காய் (Gooseberry),கொய்யா (Guava), பேரிக்காய் (Pear) இந்த பழங்களை எடுத்துக்கொள்ள சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும்  
7.உணவை எடுத்தவுடன் பழங்களை எடுப்பதால் சீக்கிரம் செரிமானம் ஆகுவதால் கழிவில் போகிறது,இதனால் உணவு எடுத்து சில மணி நேரம் கழித்து பழங்கள் எடுப்பது  சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நல்லது .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.