நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவரா... அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்குத்தான்..!
Newstm Tamil March 16, 2025 10:48 AM

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், 'சி.இ.ஆர்.டி., இன்' எனப்படும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு செயல்படுகிறது.

இது சைபர் அச்சுறுத்தல்களான ஹேக்கிங் எனப்படும் கணினியை முடக்குவது, தரவுகளை திருடுவது போன்றவற்றை கண்காணித்து தடுக்கிறது. தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கணினியில் விண்டோஸ் உள்ளிட்ட இயங்குதளங்களில் கூகுள் குரோம் பிரவுசரின் தற்போதைய பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பதிவாகியுள்ளது.

இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் கணினியில் உள்ள தகவல்களை திருட முடியும். இதை தடுக்க, கணினியில் தற்போதைய பதிப்பு குரோம் பிரவுசரை நிறுவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.