கடந்த மாதம் 14ஆம் தேதி மகளிர் பிரிமியர் லீக் போட்டி தொடங்கிய நிலையில் லீக் சுற்றும் முடிவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் தலா 10 புள்ளிகள் பெற்றது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் குஜராத் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு மும்பை மற்றும் டெல்லி அணிகள் தகுதி பெற்ற நிலையில் நேற்று போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் மும்பை அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டில் செய்த மும்பை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன் பீரித் கவுர் 66 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கிய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. மேலும் இதன் காரணமாக 8 ரங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.