பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் டாக்டர் பிரியதர்ஷினி தனது மகன், மகளுடன் சேர்ந்து மாமியாரையும் 80 வயது மாமனாரையும் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது கடந்த மார்ச் 10ஆம் தேதி இந்த சம்பவம் கர்நாடகாவின் அன்னபூர்ணேஷ்வரிநகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டாக்டர் பிரியதர்ஷினி டாக்டர் நவீன் குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மாமனார் வீட்டிற்கு பிரியதர்ஷினி போகக் கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதனை மீறி பிரியதர்ஷினி அங்கு சென்று நிலையில் பணம் கொடுக்குமாறு தகராறு செய்து மாமனார் மாமியார் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.இது பற்றி அவரின் மாமனார் ஜே. நரசிமையா புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில் அவரின் மருமகள் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு இரவு 8.30 மணிக்கு அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அதன் பிறகு டாக்டர் பிரியதர்ஷினி தன்னுடைய மாமியாரின் முடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்குவதோடு அவருடைய மகள் பாட்டி என்றும் பாராமல் காலால் எட்டி உதைக்கிறார். இதனை தடுக்க வந்த மாமனாரையும் அவர்கள் சரமாரியாக அடிக்கிறார்கள். அதோடு கேன்சரால் பாதிக்கப்பட்ட மாமியாரின் தாலியைப் பிடித்து 5 நிமிஷம் தரதரவென இழுத்துச் செல்கிறார். இந்தக் கொடூரமான செயல் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வயதான தம்பதி கூறும் போது பத்து வருடங்களாக நாங்கள் தனியாகத்தான் வாழ்ந்து வருவதாகவும் திடீரென எங்கள் வீட்டிற்குள் வந்து எங்களை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறி மருமகள் கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.