ஐஸ்வர்யா ராஜேஷ் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்குப் பிறகு நடிகராக உயர்ந்தார். இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் 50 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் இணைந்து ரம்மி திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், காக்கா முட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை வென்றார்.
பின்னர் தர்மதுரை, குற்றமே தண்டனை, முப்பரிமாணம், கட்டப்பாவ காணும், சாமி 2, செக்கச் சிவந்த வானம், வடசென்னை, நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற பல குடும்பபாங்கான கதையம்சங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பு எதார்த்தமாக இருப்பதால் மிகப் பிரபலமாக இருப்பவர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பொண்ணுங்க இப்படித்தான் இருக்க வேண்டும் நிறம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், ஒரு பொது நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் நீங்க மாநிறமாக தானே இருக்கீங்க ஆனா படங்களில் வெள்ளையாக இருக்கிறீர்கள் எப்படி என்று கேட்டார். உடனே ஐஸ்வர்யா ராஜேஷ் நான் வெள்ளை கலர் கிடையாது. நான் மாநிறமான பெண்தான். இது நம்ம ஊரு கலர்தான். மாநிறமாக இருக்கும் பெண்கள்தான் அழகாக கலையாக இருப்பார்கள். அதற்காக வெள்ளையாக இருக்கும் பெண்கள் அழகில்லை என்று சொல்லவில்லை நம்ம ஊர் பெண்களுக்கான கலர் மாநிறம் தான் என்று ஓபனாக பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.