போட்றா வெடிய... ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு!
Dinamaalai March 17, 2025 11:48 PM

மார்ச் 22ம் தேதி 'ஐபிஎல் 2025' சீசன் தொடங்கவுள்ள நிலையில் இப்போதில் இருந்தே களைக்கட்ட துவங்கிவிட்டது. 

மார்ச் 22ம் தேதி முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஐபிஎல் சீசன் துவங்கிய அடுத்த நாளே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை BookMyShow, Paytm, Zomato Insiderமற்றும்  சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அதிகாரப்பூர்வ அணி வலைத்தளங்கள் வழியாகவும், நேரடியாக மைதான கவுண்ட்டர்களில் பெற்றுக் கொள்ளலாம். 

இந்நிலையில் நாளை மறுதினம் மார்ச் 19ம் தேதி காலை 10.15 மணியளவில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.