சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சேர்ந்த முருக பக்தர், ஜவுளி வியாபாரி ஓம் குமார், சம்பவத்தன்று குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். இவர்கள் தரிசனத்துக்காக ரூ.100 கட்டண வரிசையில் காத்திருந்தபோது, ஓம் குமார் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இவரின் மரணத்துக்கு கூட்ட நெரிசல் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறின. அதனை ஏற்க மறுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஏற்கனவே உடல்நல பாதிப்பு கொண்டிருந்த ஓம் குமார் இயற்கை மரணம் அடைந்தார் என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், "திருச்செந்தூர் கோவிலில் ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது. அங்குள்ள அர்ச்சகர்கள், சாமி முன்பு சென்று தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கில் பணம் கேட்கின்றனர். இலவசம் மற்றும் ரூ.100 தரிசனத்தில் செல்வோர் குடிக்க தண்ணீர் கூட இல்லை. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வைக்கப்பட்டு தரிசனம் செய்ய அனுமதி செய்யப்படுகிறார்கள். தண்ணீர், காற்றோட்டம், மருத்துவ வசதி என அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. எங்களது தந்தைக்கு ஏற்பட்ட நிலை, வேறு யாருக்கும் ஏற்பட கூடாது.
இதையும் படிங்க:
நாங்கள் திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி என பல கோவிலுக்கு சென்று வந்துள்ளோம். ஆனால், திருச்செந்தூர் போல மோசம் வேறெங்கும் நடக்கவில்லை. பிற கோவிகளில் கூட்டம் அதிகமாக இருந்தால், விஐபி தரிசனம் வழியேவும் அனுப்பி பக்தர்களின் நலனை பாதுகாக்கின்றனர். ஆனால், திருச்செந்தூரில் பணம் பணம் என அலைகின்றனர். எங்களின் தந்தையை நாங்கள் இழந்துவிட்டோம்" என குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவிக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. ஓம் குமாரின் மரணத்துக்கு, அவரின் மோசமான உடல்நிலை காரணம் என அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: