சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று காலை பூமிக்கு திரும்பியுள்ளனர். நாசாவின் நிக் ஹேக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இணைந்து, அவர்கள் Crew-9 குழுவில் பயணித்தனர்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், அவர்களை பூமிக்கு திரும்பி, புளோரிடா கடற்கரையில் நீரில் தரையிறக்கியது. இந்த மீட்புப் பணியின் போது, டிராகன் கேப்சூல் சுற்றி டால்பின்கள் நீந்திக் கொண்டிருந்தன. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவியது. மீட்பு குழு கேப்சூலை நீரில் இருந்து மேலே தூக்கி, நீண்ட நாட்களுக்குப் பிறகு அதன் சைடு ஹேட்சை திறந்தனர்.
There are a bunch of dolphins swimming around SpaceX's Dragon capsule. They want to say hi to the Astronauts too! lol
பின்னர், விண்வெளி வீரர்கள் கேப்சூலிலிருந்து வெளியேறி, ஹூஸ்டன் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு 45 நாட்கள் மறுவாழ்வு பயிற்சி வழங்கப்படும்.