சூதாட்டம் செயலிகளை ப்ரொமோட் செய்யும் விதமாக செயல்பட்டதாக கூறி நடிகர், நடிகைகள் மீது தெலுங்கானா போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பெட்டிங் செயலிகளை பிரமோட் செய்ததாக ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ், விஜய தேவரகொண்டா ஆகியோர் மீது தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் மஞ்சு லட்சுமி, பிரணிதா, நிதி அகர்வால் உள்ளிட்ட 18 பிரபலங்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.