“ஒரே இடத்தில் 2-து சம்பவம்”… விபத்தில் இறந்த மனைவி… எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர்…? அதுக்கு முன்பு மூதாட்டி… மதுரையில் பரபரப்பு…!!
SeithiSolai Tamil March 20, 2025 07:48 PM

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே ஈச்சனோடை பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு சாக்கு முட்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் ஒரு பெண்ணின் கால் வெளியே தெரிந்தது. அதோடு சாக்கு மூட்டை முழுதும் ரத்தமாக இருந்த நிலையில்இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் கொலை செய்யப்பட்டது மதுரையைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க இந்திராணி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக சந்திரசேகர் (50), அமர்நாத் (38)ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் நகைக்காக மூதாட்டியை எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்ட இந்திராணி ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருக்கும் நிலையில் அவரை காணவில்லை என புகார் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் அதே இடத்தின் அருகே போலீஸ்காரர் ஒருவர் பாதி ஏரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதாவது விருதுநகரைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க மலையரசன் என்பவர் காளையார் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் தனி படை பிரிவில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி கடந்த 1-ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருடைய இறுதி சடங்குகள் அனைத்தையும் மலையரசன் முடிந்த நிலையில், தன் மனைவியின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். அதன் பின் அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது நிலையில் தற்போது ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.