பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோயை எப்படி தடுக்கலாம் தெரியுமா ?
Top Tamil News March 28, 2025 09:48 AM

பொதுவாக  மார்பக புற்று நோய் பெண்களை மட்டுமல்ல இந்த நோய் ஆண்களையும் தாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .இந்த நோய் ஒரு சதவீதம்  ஆண்களுக்கு வருகிறது .இந்த நோய் எந்த மாதிரி பெண்களை அதிகம் தாக்கும் என்று பார்க்கலாம்

1.குடும்பத்தில் ரத்த உறவுகளில் உள்ள பெண்களில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .
2.ஏற்கெனவே புற்றுநோய் பாதித்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், தொடர் பரிசோதனைகளைத் தவிர்க்கக் கூடாது.
3.மருத்துவரின் அறிவுரையுடன் வருடம் ஒருமுறை மார்பகத்தில் மாமோகிராம் பரிசோதனை செய்து கொண்டால் நோயை முற்ற விடாமல் கண்டுபிடிக்கலாம்


4.சிறுவயதில் மருத்துவ காரணமாகத் தீவிர கதிரியக்க சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்தால், வருங்காலத்தில் புற்றுநோய் ஏற்படலாம். இந்தப் பாதிப்பு ‘ஹாட்ஜ்கின்’ஸ் நோய்’ (Hodgkin’s ailment) எனக் கூறப்படுகிறது.
5. 11 வயதுக்கு முன்பே பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு, ‘ஈஸ்ட்ரோஜென்’ ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கு மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்
6.மெனோபாஸ்’, சரியான வயதில் வராமல், இயல்பைவிடத் தள்ளிப்போகும் பெண்களுக்கு , மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.