சீனாவில் ஹீ என்ற இரண்டு மாத குழந்தையை அவளது பெற்றோர் தத்து கொடுத்து விட்டனர். இந்நிலையில் ஹீ என்ற பெண் 27 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். ஹீ தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையை பார்க்க விரும்புவதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிலிருந்து இரண்டு நாட்களில் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசிவந்தனர். மீண்டும் மகளுடன் இணைவது சந்தோஷம் அளிப்பதாக ஹீயின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் அவளது பெற்றோர் தத்து கொடுத்ததற்கக ஹீயிடம் மன்னிப்பு கேட்டனர்.