அசால்ட்டாக குடியிருப்புக்கு வந்த நபர்…. “2 பை நிறைய…” இது என்னப்பா புதுசு புதுசு பண்றாங்க…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil April 06, 2025 03:48 AM

மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள உயர அடுக்குமாடி குடியிருப்புகளில் நுழைந்த ஒருவர் 13 மாடிகளில் உள்ள புகழ்பெற்ற நபர்களின் விலை உயர்ந்த காலணிகளை திருடி சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகளில், சந்தேக நபர் எலிவேட்டரில் ஏறி, ஒவ்வொரு மாடியிலும் உள்ள காலணிகளை இரண்டு பைகள் நிறைய எடுத்து, எந்த தயக்கமுமின்றி அங்கிருந்து சென்றது தெளிவாக பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் எஃப்பிஐஆர் பதிவு செய்தார்களா அல்லது குற்றவாளி கைது செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக இன்னும் உறுதியான தகவல் இல்லை.

ஆனால், குற்றவாளியின் முகம் சைஃப் அலி கான் வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் ஒத்திருக்கிறது என நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். “சப்பல் சோர்” என்ற பெயருடன் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் விமர்சனங்களும் பரவி வருகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.